ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த தொலைக்காட்சி நாடக நடிகர் ஒருவர் பொலிஸாருக்கு 10 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்கி தப்பிச் செல்ல முற்பட்ட வேளை தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 26 வயதுடைய தொலைக்காட்சி நாடக நடிகர் ஆவார்.
சந்தேக நபர் வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர் தன்னை கைது செய்யாமல் இருக்க தனமல்வில தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.பி பண்டாரவுக்கு 10 இலட்சம் வழங்க முற்பட்டுள்ளார்.
இந்நிலையில், தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழங்கிய தகவலின் பேரில் பொலிஸ் அதிகாரி குழு ஒன்று பலஹருவ பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது 10,300 கிராம் ஐஸ் போதைப்பொருடன் சந்தேக நபரை கைது செய்துள்ளது.
இதேவேளை, தலைமன்னார் பகுதியில் 40 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்டமை தொடர்பில் சந்தேக நபருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அவருக்கு எதிரான சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனமல்வில தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.பி பண்டாரவின் கீழ் பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM