(நெவில் அன்தனி)
ஸ்கொட்லாந்துக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) இரவு நடைபெற்ற பி குழு ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
தென் ஆபிரிக்காவிடம் படுதோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்த வெற்றி உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பது நிச்சயம்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸ்கொட்லாந்து கடும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றது.
ஸ்கொட்லாந்து சார்பாக ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்கள் அனைவரும் மந்த கதியிலேயே ஓட்டங்களைப் பெற்றனர்.
எய்ல்ஸா லிஸ்டர் (26), அணித் தலைவி கெத்ரின் ப்றைஸ் (25) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 46 ஓட்டங்களே ஸ்கொட்லாந்து இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
அவர்களைவிட டார்சி காட்டர் (14 ஆ.இ.), சஸ்கியா ஹோர்லி (11), லோர்னா ஜெக் ப்றவுண் (11) ஆகிய மூவர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் அஃபி ப்ளெச்சர் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 11.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அணித் தலைவி ஹேய்லி மெத்யூஸ் (8), ஸ்டெஃபானி டெய்லர் (4), ஷெமெய்ன் கெம்பெல் (2) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டம் இழந்தனர்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கியானா ஜோசப் 18 பந்துகளில் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 31 ஓட்டங்களைப் பெற்று 4ஆவதாக ஆட்டம் இழந்தார்.
பின்னர் டியேந்த்ரா டொட்டின், சினெலி ஹென்றி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை 12ஆவது ஓவரில் உறுதிசெய்தனர்.
டியேந்த்ரா டொட்டின் 15 பந்துகளில் 28 ஓட்டங்களுடனும் சினெல் ஹென்றி 10 பந்துகளில் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
ஆட்டநாயகி: சினெல் ஹென்றி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM