(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தவர்களே தற்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் எந்த பதவியையும் வகிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்ட குழுவினரே தற்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கப் போவதாகக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் சுதந்திர கட்சியில் எந்தவொரு பதவியையும் வகிக்கவில்லை.
நாம் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ளோம். அதற்கமைய ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் கூட்டணியில் போட்டியிடவுள்ளோம்.
விரைவில் எமது கூட்டணி வேட்புமனுவை தாக்கல் செய்யும். நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மேலும் பலப்படுத்தி உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM