அரிசியில் செயற்கை தவிட்டு சாயத்தை கலந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் பரிசோதனையை மேற்கொண்டவேளை, செயற்கை தவிட்டு சாயங்கள் கலந்த ஒரு தொகை அரிசியினை கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடித்துள்ளார்.
அந்த அரிசி மாதிரிகளை மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக அநுராதபுரத்தில் உள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவில், அரிசியில் சாயம் கலக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து, அரிசி ஆலை உரிமையாளருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை (4) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM