தமிழ் தரப்புகளை சந்திக்காமல் சென்ற ஜெய்சங்கர்

06 Oct, 2024 | 11:13 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (4) இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பினார். 

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இராஜதந்திர மட்டத்தில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்த எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்திருந்தார்.

மேலும் பாத்ஃண்டர் அமைப்பின் மிலிந்த மொரகொட உள்ளிட்ட அந்த அமைப்பின் நிர்வாகிகளையும் சந்தித்திருந்தார். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட முஸ்லிம் தரப்புகளை வழமையாகவே இலங்கை விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட ஏனைய இந்திய பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடுவது இயல்பானது. ஆனால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னரான முக்கியமானதொரு தருணத்தில் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமிழ் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பியுள்ளார்.

இது குறித்து கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிடுகையில், இத்தகைய இந்திய முக்கிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும் போது எம்முடனான சந்திப்புகள் திட்டமிடப்பட்டு எமக்கு அறிவிக்கப்படும். ஆனால் இம்முறை இடம்பெற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் விஜயத்தில் எம்முடனான சந்திப்பு இடம்பெறவில்லை. இது ஏன் என்று எமக்கு தெரியாது என குறிப்பிட்டார்.

எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடனான சந்திப்பின்போது இனப்பிரச்சினை சார்ந்த விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாகவும் வினைத்திறன் மிக்க வகையில் நடைமுறைப்படுத்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கொழும்பு சந்திப்புகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், 13ஆவது திருத்தத்தின் எதிர்காலம் அடுத்து வரக்கூடிய புதிய பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெளிவாகவே ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. 

இந்தியா வலியுறுத்துகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் மற்றும் 13ஆவது திருத்தம் என்பன சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ள புதிய அரசியலமைப்பு ஊடாகவே தீர்மானிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும்  வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34