நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

Published By: Digital Desk 7

06 Oct, 2024 | 08:58 AM
image

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை , மன்னார்,கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை  வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இக் கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து  காற்று வீசும். 

ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 50 கிலோ மீற்றர் இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05
news-image

சட்டவிரோதமாக இராமேஸ்வரத்திற்கு சென்ற இலங்கை பிரஜைக்கு...

2025-11-08 13:56:49
news-image

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் கசிப்பு...

2025-11-08 12:51:52
news-image

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில்...

2025-11-08 12:35:59
news-image

ருஹுணு பல்கலைக்கழக இணை சுகாதாரப் பீடத்தின்...

2025-11-08 12:27:42
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; உயிரிழந்தவர்...

2025-11-08 14:18:35
news-image

'முழு நாடுமே ஒன்றாக' போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-11-08 12:04:21
news-image

சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் தாதியர்...

2025-11-08 11:06:14
news-image

“மஹரகம அக்கா” கைது!

2025-11-08 11:05:48