(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷிடம் சிறு சவாலை எதிர்கொண்ட இங்கிலாந்து இறுதியில் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் எதிரணிக்கு தன்னால் நிர்ணயிக்கப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையை தக்கவைத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.
சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் உயரிய தரத்தைக் கொண்ட பந்துவீச்சு, ஆட்டத்தின் பிடி இங்கிலாந்திடமிருந்து நழுவாமல் இருப்பதை உறுதிசெய்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.
இதுவரை நடைபெற்று முடிந்த 6 போட்டிகளில் நியூஸிலாந்தைத் தவிர முதலில் துடுப்பெடுத்தாடிய வேறு எந்த அணியும் 120 ஓட்டங்களை எட்டவில்லை.
மாயா பௌச்சர், டெனி வியட் ஹொஜ் ஆகிய இருவரும் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகம் சிறுக சிறுக குறைந்தது.. 12 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆனால், அதன் பின்னர் பங்களாதேஷின் சவால் மிக்க பந்துவீச்சுக்கு மத்தியில் கடைசி 8 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து இங்கிலாந்தினால் மேலதிகமாக 42 ஓட்டங்களையே பெறமுடிந்தது.
துடுப்பாட்டத்தில் டெனி வியட் ஹொஜ் 41 ஓட்டங்களையும் மாயா பௌச்சர் 23 ஓட்டங்களையும் அமி ஜோன்ஸ் ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பாஹிமா காத்துன் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிட்டு மோனி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நஹிதா அக்தர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
சோபனா மோஸ்தரி 44 ஓட்டங்களையும் அணித் தலைவி நிகார் சுல்தானா 15 ஓட்டங்களையும் பெற்றனர்
பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாலி டீன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: டெனி வியட் ஹொஜ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM