நடிகர் ஜீவா நடிப்பில் தயாராகி இருக்கும் 'பிளாக்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி பிரத்யேக புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கே. ஜி. பாலசுப்பிரமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிளாக்' எனும் திரைப்படத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, யோக் ஜே பி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோ எல் எல் பி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ,எஸ் ஆர் பிரபு, கோபிநாத் ,தங்க பிரபாகரன் , ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும், முன்னோட்டமும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 11ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே ஒக்டோபர் 10 ஆம் திகதியன்று சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் 'வேட்டையன்' எனும் திரைப்படம் மட்டுமே பட மாளிகையில் வெளியாகிறது என்பதும், அதற்கு அடுத்த நாள் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் 'பிளாக்' எனும் இந்தத் திரைப்படத்தை வெளியிடுகிறார்கள் என்பதும் , இதனால் இந்த திரைப்படம் வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெறுமா? என்பது சந்தேகம் என திரையுலக வணிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM