'எட்டு தோட்டாக்கள்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளை வழங்கி, ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நடிகர் வெற்றி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை 'திரைக்கதை மன்னன்' இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட , தயாரிப்பாளரும், நடிகருமான டி. சிவா பற்றுக்கொண்டார்.
'காரோட்டியின் காதலி' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார்.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜ், தயாரிப்பாளரும், நடிகருமான டி சிவா ,இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். சிவா பேசுகையில், '' ஒரு எழுத்தாளரின் வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறேன். ஒரு புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். ஒரு புத்தகம் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றி விடும் ஆற்றல் படைத்தது.
ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கைக்கும், அர்த்தமுள்ள தேடலையும் நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் உங்களுக்குள் ஏற்படுத்தும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கும் புத்தகங்கள் தூண்டுகோலாக இருக்கும்.
எம்முடைய பிள்ளைகளுக்கு வாசிப்பின் அருமையை பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. இது தவறு. புத்தகங்கள் தான் ஒரு மனிதனை பண்படுத்தும். தமிழில் லட்சக்கணக்கான புத்தகங்களும், எழுத்துகளும் உள்ளன. அதனை வாசித்தால் நண்பர்கள் தேவையில்லை.
இந்தத் திரைப்படத்தில் ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கையை வாழத் தொடங்கும் கதையின் நாயகனுக்கு காதலுக்கு பிறகும் வன்முறைக்கு பிறகும் வாழ்க்கையை தேட தொடங்குகிறான்.
அதில் கிடைத்த அனுபவத்தை மூலமாக கொண்டு கதையை எழுதி எழுத்தாளராக உயர்கிறார். இதனை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் தரமான படைப்பாக உருவாக்கி இருக்கிறோம்.
இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM