புதுமுக நடிகர் விஸ்வத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ராக்கெட் டிரைவர்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ஸ்ரீ ராம் ஆனந்த சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ராக்கெட் டிரைவர்' எனும் திரைப்படத்தில் விஸ்வத், நாக விஷால், சுனைனா, காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைத்திருக்கிறார்.
மாய எதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி ஃபேண்டஸி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோரீஸ் பை தி ஷோர் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குர் பேசுகையில், '' ஓட்டோ ஓட்டும் சாரதியான கதையின் நாயகனுக்கு மறைந்த இந்திய குடியரசு தலைவரான அப்துல் கலாம் ஒரு முன்மாதிரியான மனிதர்.
இவர் ஓட்டோ வாகனத்தை இயக்கும் போது இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கிறார். அந்த தருணத்தில் அவருடைய வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் திருப்பம் ஏற்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதை. '' என்றார்.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இளம் வயது அப்துல் கலாம் தோன்றுவதும். அவருடைய பேச்சுக்களும் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM