'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தயாராகும் 'விஜய் 69' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
இயக்குநர் ஹெச் .வினோத் இயக்கத்தில் உருவாகும் 'விஜய் 69' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் விஜய் , பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமீதா பைஜு, மோனிகா பிளெஸ்சி, பிரகாஷ்ராஜ் , கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார்.
விஜய் நடிப்பில் தயாராகும் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த 'விஜய் 69' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
இந்த நிகழ்வில் விரைவில் அரசியல்வாதியாக களமிறங்கும் நடிகர் விஜய் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வருகை தந்தார்.
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் , விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மையப்படுத்திய அரசியல் கலந்த படைப்பாக உருவாகி வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM