(நெவில் அன்தனி)
ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் ஆசிய சம்பியன் இலங்கை, தனது இரண்டாவது போட்டியில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (5) எதிர்த்தாடவுள்ளது.
இந்தப் போட்டி இன்னும் சுற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளில் பங்களாதேஷையும் ஸ்கொட்லாந்தையும் வெற்றிகொண்ட இலங்கை, ஆரம்ப உலகக் கிண்ணப் போட்டியில் தரவரிசையில் பின்னிலையில் உள்ள பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
அதுவும் சுமாரான 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 9 விக்கெட் இழப்புக்கு 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கையின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால், களத்தடுப்பில் 3 பிடிகளைத் தவறவிட்டதும் துடுப்பாட்டத்தில் மோசமான அடி தெரிவுகளால் விக்கெட்களை தாரை வார்த்ததும் இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
பாகிஸ்தானுடனான போட்டியில் சாதிக்க முடியாமல் போன இலங்கை பெரும் அழுத்தத்துக்கு மத்தியிலேயே அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கான அனுகூலமான அணியாக காணப்படுகிறது.
இதேவேளை, பாகிஸ்தானுடனான தோல்விக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட சமரி அத்தபத்து,
'நாங்கள் மீண்டு வருவோம் என நம்புகிறேன். பாகிஸ்தானுடனான போட்டியில் நாங்கள் திறமையாக பந்துவீசினோம். அதேபோன்று துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்படவேண்டும். நாங்கள் நேர்மறையான அணுகுமுறையுடனும் துணிச்சலுடனும் விளையாட வேண்டும். நாங்கள் திறமையாக விளையாடினால் எத்தகைய அணியையும் தோற்கடிக்க முடியும்' என்றார்.
இதுவரை இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 7 மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் இலங்கை 10 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.
எனவே, அதிசயம் நிகழ்ந்தாலன்றி இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவை இலங்கை வெற்றிகொள்வதென்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
குழாம்கள்
இலங்கை: சமரி அத்தபத்து (தலைவி), ஹர்ஷிதா சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, ஹாசினி பெரேரா, அனுஷா சஞ்சீவனி, சச்சினி நிசன்சலா, உதேஷிகா ப்ரபோதனி, இனோஷி ப்ரியதர்ஷனி, அச்சினி குலசூரிய, இனோக்கா ரணவீர, ஷ ஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா, சுகந்திகா குமாரி.
அவுஸ்திரேலியா: அலிசா ஹீலி (தலைவி), டாசி ப்றவண், ஏஷ்லி கார்ட்னர், கிம் கார்த், க்றேஸ் ஹெரிஸ், அலனா கிங், ஃபோப் லிச்பீல்ட், தஹிலா மெக்ரா, சொபி மொலினொக்ஸ், பெத் மூனி, எலிஸ் பெரி, மெகான் ஷூட், அனாபெல் சதர்லண்ட், ஜோர்ஜியோ வெயாஹாம், டெய்லா விலெமின்க்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM