அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவனுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கலந்த உணவை கொண்டு சென்ற பெண்ணொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், சுச்சாரித்தாகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்ப்பதற்காக பெண்ணொருவர் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இந்த பெண் கொண்டு சென்ற உணவுப் பொதியில் இருந்த தேங்காய் சம்பலில் போதைப்பொருள் கலந்திருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM