போதைப்பொருட்களுடன் "படோவிட்ட அசங்க"வின் இரு உதவியாளர்கள் கைது

Published By: Digital Desk 2

05 Oct, 2024 | 12:03 PM
image

பாதாள உலக கும்பலை சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான"படோவிட்ட அசங்க"வின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதவல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரும், 67 வயதுடைய பெண்ணுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து  06 கிராம் 950 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்,  01 கிராம் 190 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 40  போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09
news-image

யாழ். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-03-22 12:59:29
news-image

ஓடையில் விழுந்து டிப்பர் வாகனம் விபத்து...

2025-03-22 12:47:47
news-image

யாழில் போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட...

2025-03-22 12:27:41
news-image

கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு...

2025-03-22 12:28:03
news-image

குடும்பத் தகராறு ; மனைவி வெட்டிக்...

2025-03-22 12:05:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-22 11:46:33
news-image

சமனலவெவ பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-22 11:22:04
news-image

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திய இருவர்...

2025-03-22 11:14:58