bestweb

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் 

Published By: Digital Desk 3

05 Oct, 2024 | 08:45 AM
image

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி  கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் 

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை  வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து  காற்று வீசும். 

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-19 06:22:45
news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10