சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற தேரருக்கு விளக்கமறியல்

04 Oct, 2024 | 04:22 PM
image

16 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக கூறப்படும் தேரரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிவான் ராஜிந்த ஜயசூரிய நேற்று (03) உத்தரவிட்டுள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சந்தேக நபரான தேரர் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனின் பெற்றோரிடம் சிறுவனுக்குப் பரிகாரம் ஒன்று செய்ய வேண்டும் என கூறி சிறுவனைத் தனது அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

இதன்போது, இந்த சிறுவன் குறித்த அறையிலிருந்து தப்பிச் சென்று இது தொடர்பில் தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், இந்த உறவினர் இது தொடர்பில் சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, சிறுவனின் தாய் இது தொடர்பில் ஹோமாகம தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரான தேரர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று (03) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம  தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23