போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

Published By: Digital Desk 2

04 Oct, 2024 | 06:34 PM
image

தெஹியோவிட்ட, தெபேகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரினால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட பொலிஸார்  தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

தெஹியோவிட்ட, தெபேகம பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்யதுள்ளனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரினால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வாள்கள்,  இரண்டு கத்திகள் , வாள் தயாரிக்கும் வெள்ளை இரும்புத் தகடுகள் மற்றும் வாள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும்  உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரின் வீட்டிற்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் செல்வதாக கூறப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் அல்கொட மற்றும் முருத்தெட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23