கலை, இலக்கிய, தமிழ் பண்பாட்டை உணர்த்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஞயம்பட உரை' கலாசார நிகழ்வு எதிர்வரும் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு நெலும் பொக்குண மகிந்த ராஜபக்ஷ கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இக்கலாசார நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா மகராஜ், சிறப்பு விருந்தினர்களாக சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி ராஜவிஜயன் மற்றும் அஷ்டாங்க யோக மந்திர் நிறுவுனர் வியாஸ கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது, விருந்தினர் வரவேற்பை தொடர்ந்து சைவ மங்கையர் வித்தியாலய மாணவர்கள் பங்கேற்கும் இலக்கிய அரங்க ஆற்றுகை, புராண நாடகம் (காயகல்பம்), விடுகதை பாடல், இராமகிருஷ்ண மிஷன் சமயப் பாடசாலை மாணவர்கள் வழங்கும் இசைக்கச்சேரி, அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்களின் “ஞானம் ஓர் வடிவாகி” நாட்டியம் ஆகியவை நிகழ்த்தப்படவுள்ளன.
மேலும், இக்கலாசார நிகழ்வில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM