ஹெஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படக்கூடியவர் என கருதப்படுபவரை இலக்குவைத்து லெபனான் தலைநகரில் தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹெஸ்புல்லா இயக்க்தின் முக்கிய உறுப்பினரான ஹாஷிம் சாபீதின் என்பவரை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் கொல்லப்பட்டாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை
ஹெஸ்புல்லா அமைப்பின் நிறைவேற்றுக்குழுவின் தலைவரான இவர் இராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுக்கும் ஜிகாத் குழுவின் உறுப்பினராகவும் காணப்படுகின்றார்.
ஹெஸ்புல்லா அமைப்பின் அடுத்த தலைவரை இலக்குவைத்தே பெய்ரூட்டின் தென்புறநகர் பகுதிகள் மீது கடும் வான் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை ஹெஸ்புல்லா அமைப்பின் பதுங்குழிகளை இலக்குவைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக நியுயோர்க் டைம்சிற்கு தெரிவித்துள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் எனினும் அவரின் நிலை குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளனர்.
ஹெஸ்புல்லா தலைவரை கொலை செய்வதற்காக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற மிகவும் கடுமையான தாக்குதல் இதுவென தெரியவருகின்றது.
சபீதின் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களை சந்தித்துக்கொண்டிருந்தார் என கருதப்படும் தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM