சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

Published By: Digital Desk 7

04 Oct, 2024 | 08:51 AM
image

வடக்கு ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர்  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து  காற்று வீசும். 

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 50  கிலோ மீற்றர்  இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16
news-image

இன்றைய வானிலை

2025-01-16 06:09:53
news-image

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண்...

2025-01-16 03:53:40
news-image

மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் நடந்து...

2025-01-16 03:49:57
news-image

வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில் இரு இலங்கை...

2025-01-16 03:31:16
news-image

இருதரப்பு மற்றும் பல்தரப்பு உள்ளிட்ட சகல...

2025-01-16 03:19:30