மாலபே - கடுவலை பிரதான வீதியின், கொத்தலாவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ADS

குறித்த இருவரும் நேற்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் போமிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான ருவன் துஷார என்ற பிடலி துஷார மற்றும்  49 வயதான கொத்தலாவலகே பியவங்ச சோமகுப்த  ஆகிய இருவர் கொலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.