ஆனமடுவவில் வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயிற்றுவிக்கும் பஸ்ஸில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன தொழிநுட்ப கற்கை நெறியை பயின்று கொண்டிருந்த மாணவர் ஒருவர் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட அதே பஸ்ஸில் மோதியதில் பலத்த காயமடைந்து ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஆனமடுவ மஹா உஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சாமிக்க பிரபாத் பெர்னாண்டோ என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த பேருந்து தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் வைத்து பழுது நீக்கும் (வயரிங்) பணிக்காக வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், திடீரென மாணவன் அதில் ஏறி வழுக்கி, பயணித்த அதே பேருந்தின் அடியில் விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவன் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் கைகளால் பழுதுபார்த்த அதே பேருந்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிருடன் விடைபெற நேர்ந்தது நெஞ்சை உலுக்கும் சம்பவம்.
விபத்து தொடர்பில் பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேரூந்து ஆனமடுவ பொலிஸாரால் பொறுப்பேற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM