கேட்ஸ் மன்றத்தின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க இன்று (03) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கேட்ஸ் மன்றத்தினால் இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய மேம்படுத்துதல்,பாடசாலை மதிய உணவு வழங்குதல் உள்ளிட்ட குழந்தைகளின் போஷாக்கை மேம்படுத்துதல், அரச மற்றும் தனியார் துறைகளில் மனித வளங்களை மேம்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, காலநிலை மாற்றம் போன்ற துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சந்தித்த சமரநாயக்க, அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு நிதி, தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை ஆதரவை வழங்குவதற்கு கேட்ஸ் மன்றம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகேயும் கலந்துகொண்டார்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM