சிறிய அளவில் பணத்தை முதலீடு செய்து விற்பனை நிலையத்தை தொடங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வணிகம் செய்து அதனூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் பலரும் விவரிக்க இயலாத பல்வேறு காரணங்களால் அவர்களுடைய நாளாந்த வணிகம் பாதிக்கப்படும்போது தடுமாற்றம் அடைகிறார்கள்.
நன்றாக சென்று கொண்டிருந்த வணிகம் ஏன் திடீரென்று தடைப்பட்டு நின்றது? என புரியாமல் தவிப்பர்.
அதேபோல் எம்முடைய குடும்பத்திலும் உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் உரையாடிக் கொண்டு நாட்களை கடத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் திடீரென்று சமீப காலமாக ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சியான வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளாமல் அமைதியாக கடந்து செல்வர்.
இதற்கான பின்னணி என்ன? என்பது குடும்பத்தை நடத்திச் செல்லும் இல்லத்தரசிகளுக்கும் புரியாத புதிராகவே இருக்கும்.
இந்தத் தருணத்தில் தீய சக்திகள் அல்லது எம்முடைய முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தும் மாயத்தடைகள் எம்முடைய விற்பனை நிலையங்களிலோ அல்லது குடும்பத்திலோ ஏற்பட்டிருக்கக்கூடும் என குறிப்பிடும் ஆன்மீக முன்னோர்கள் இதனை தீய சக்திகள் என வகைப்படுத்துகிறார்கள்.
இத்தகைய தீய சக்தியை விலக வேண்டும் என்றால் அதற்குரிய எளிய வழிமுறைகளையும், எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
சிருங்கேரி சாரதா அன்னை , சோட்டாணிக்கரை பகவதி அம்மன், மடப்புரம் காளியம்மன் , சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மைசூரூ சாமுண்டிஸ்வரி அம்மன், ஆகிய அம்மன் புகைப்படங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அல்லது மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அம்மனின் புகைப்படங்களில் உங்களுக்கு எது பிடித்து இருக்கிறதோ...! அந்த அம்மனின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, வெள்ளிக்கிழமைகளில் உங்களது பூஜை அறையில் வைத்து, 18 நெய் தீபத்தை ஏற்றி, 'எம்மையும் எம்முடைய விற்பனை நிலையத்தையும் ஆக்கிரமித்திருக்கும் எதிர்மறை சக்திகள் விலகி, நல்லருள் புரிய வேண்டும்' என மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள்.
மேலும் உங்களது வீட்டின் நிலை வாசல் படியின் வெளிப்பகுதியில் திரிசூலம் அல்லது எலுமிச்சை பழத்தை கட்டி தொங்க விடுங்கள்.
இதனை செய்வதில் ஏதேனும் சங்கடங்கள் இருந்தால்.. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெள்ளருக்கு வேர் சிறிதளவு வாங்கி வந்து அதனை சதுர வடிவத்திலான சிவப்பு வண்ண துணியில் கட்டி உங்களது வாசலில் தொங்க விடுங்கள்.
இதனை தொடர்ச்சியாக 48 நாட்கள் வரை பின்பற்றும்போது உங்களை பிடித்திருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி விடும்.
தீய சக்திகளும் விலகி விடும். அதனால் தடைபட்டிருந்த வணிகம் பிறகு நல்ல நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கும். குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியுடன் பல விடயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM