முதுமையின் காரணமாகவும், கண்களின் ஆரோக்கியத்தை முழுமையாக பேணி பராமரிக்காமல் இருப்பதன் காரணமாகவும், எம்மில் பெரும்பாலானவர்களுக்கு கண் புரை பாதிப்பு ஏற்படுகிறது.
இத்தகைய கண் புரை பாதிப்பின் காரணமாக ஏற்படும் பார்வை குறைவு திறனை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய அதி நவீன சிகிச்சை மூலம் முழுமையான பார்வை திறனை மீட்டெடுக்க இயலும் என வைத்திய நிபுணர்களை தெரிவிக்கிறார்கள்.
கண்புரை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மாலை நேரங்களில் பக்கவாட்டு பகுதிகளில் நடைபெறுவதை துல்லியமாக பார்வையிட இயலாது.
வேறு சிலருக்கு இத்தகைய கண் புரை பாதிப்பு ஒரே தருணத்தில் இரண்டு கண்களிலும் ஏற்படக்கூடும்.
இத்தகைய பார்வை திறன் குறைபாட்டை உடனடியாக வைத்திய நிபுணரிடம் சென்று பரிசோதனை செய்து சீராக்கி கொள்ளாவிட்டால் நாளடைவில் பார்வைத் திறன் பாதிப்பு முழுமையாக ஏற்படும்.
அத்துடன் நவீன சிகிச்சைகள் மூலம் பார்வைத் திறனை முழுமையாக மீட்டெடுப்பதிலும் கடும் சவால்கள் உண்டாகும்.
இதன் காரணமாக கண் புரை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை உடனடியாக அவதானித்து வைத்தியர்களிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இத்தகைய நோயாளிகளுக்கு தற்போது கண் புரையின் பாதிப்பு எந்த நிலையில் இருந்தாலும் அதனை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கருவிகள் மூலமாக துல்லியமாக அவதானித்து, அதனை அகற்ற முடியும்.
அதன் பிறகு அப்பகுதியில் செயற்கையான லென்ஸ்களை பொருத்தி, பார்வையை மீட்டெடுக்க முடியும். மேலும் இத்தகைய நவீன சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் பார்வை திறன் வெகு விரைவில் மீட்டெடுக்கப்படும்.
இதன் காரணமாக அவர்கள் தங்களது நாளாந்த நடவடிக்கையை விரைவில் தொடங்க இயலும். மேலும் எந்த வயதினரும் இத்தகைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன சிகிச்சையை மேற்கொள்ள இயலும்.
வைத்தியர் சுகன்யா
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM