தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பொதுச்செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்

Published By: Robert

12 Jan, 2016 | 12:36 PM
image

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்  பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மீதான தடுப்பு காவல் உத்தரவு மட்டக்களப்பு  மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால்  ஜனவரி மாதம் 26ம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி  அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன்  உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக  கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.

குறித்த வாக்கு மூலத்தையடுத்து விசாரனைகளை மேற்கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் பிரகாரம்  தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்  இன்று   மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

விசாரனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் தடுப்பு காவல் உத்தரவை நீடிக்க நீதிமன்ற அனுமதி கோரி பொலிஸார் முன் வைத்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.கணேசராசா தடுப்பு உத்தரவு நீடிப்பதற்கான அனுமதியை வழங்கினார்.

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47