மதுசார பாவனையினால் உலகில் ஆண்டுக்கு 03 மில்லியன் பேர் பலி ; அரசுக்கு 237 பில்லியன் ரூபாய் வருடாந்த சுகாதார, பொருளாதார செலவீனங்கள் - ADIC நிறுவனம் 

03 Oct, 2024 | 01:08 PM
image

இன்று (ஒக்டோபர் 3) சர்வதேச மதுசார தடுப்பு தினம்! 

துசார பாவனையினால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார செலவீனங்கள் 237 பில்லியன் ரூபாயாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) தகவல் தெரிவித்துள்ளது. 

ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மதுசார தடுப்பு தினமாகும். மதுசார பாவனையினால் வருடாந்தம் உலகளாவிய ரீதியில் சுமார் 03 மில்லியன் பேர் அகால மரணமடைகின்றனர். உலகெங்கும் ஏற்படும் 10 மரணங்களில் 08 மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன. தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான பிரதான நான்கு காரணங்களுள் முதன்மை காரணமாக மதுசார பாவனை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடு என்ற ரீதியில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் பல்வேறு வகையான சுகாதார, பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எமது நாட்டில் மதுசார பாவனையினால் தினமும் சுமார் 50 பேர் அகால மரணமடைவதுடன் வருடாந்தம் சுமார் 15000 – 20000 பேர் அகால மரணமடைகின்றனர். 

மேலும் 2022ஆம் ஆண்டு மதுசாரத்தினால் கிடைக்கப்பெற்ற மதுவரி வருமானம் 165 பில்லியன்  ரூபாய் ஆகும். 

2023ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதியத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 2022ஆம் ஆண்டு மதுசார பாவனையினால் ஏற்படும் பொருளாதார மற்றும் சுகாதார சீர்கேடுகளுக்காக 237 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆகவே, மதுசாரம் ஒரு நாட்டுக்கு இலாபகரமானது அல்ல என்பதும் தெளிவாகிறது. 

மேலும், மது வரியினால் கிடைக்கப்பெறும் வரி வருமானத்தை விட மதுசார பாவனையினால் ஏற்படும் பொருளாதார மற்றும் சுகாதார செலவீனங்கள் அதிகம் என்பது இப்பகுப்பாய்வின் மூலம் விஞ்ஞான ரீதியாக ஒப்புவிக்கக்கூடியதாக உள்ளது.

2006ஆம் ஆண்டு 27ஆம் இலக்க தேசிய மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்தின்படி, மதுசாரம் மற்றும் புகைப்பொருள் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனினும், இச்சட்டத்தை மீறும் வகையில் மதுசார நிறுவனங்களால் பிள்ளைகளையும் இளைஞர்களையும் இலக்கு வைத்து பல்வேறு விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இளைஞர்களும் சிறுவர்களும் மதுசார நிறுனவங்களின் பிரதான இலக்குக் குழுக்களாகும்.

மதுசார பாவனையினால் அகால மரணமடைகின்ற ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கு பதிலாகவும் இளைஞர்களையும் சிறுவர்களையுமே இலக்கு வைக்கின்றனர். அதற்காக மதுசாரத்துக்கான கவர்ச்சியை அதிகரித்து காண்பிப்பது குறிப்பிட்ட மதுசார நிறுவனங்களின் இலக்காகும்.

மதுசார பாவனையில் வீழ்ச்சி ஏற்படுவதானது நாட்டுக்கு சிறந்தவொரு குறிகாட்டியாகும். அதாவது மதுசார பாவனையில் வீழ்ச்சி ஏற்படும் போது சுகாதார செலவீனங்கள் குறைவடையும்.  பொது மக்களின் சுகாதாரம் விருத்தியடையும். குடும்பங்களுள் மகிழ்ச்சி, ஒற்றுமை ஆகியன விருத்தியடையும். 

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றின்படி, மதுசாரத்துக்கான வரி அறவிடுதல் மற்றும் விஞ்ஞான ரீதியாக மதுசாரத்துக்கான விலையை நிர்ணயித்தல் ஆகியவை விஞ்ஞான ரீதியானதும் செலவீனம் குறைந்ததுமான பயனுள்ள மதுசாரக் கட்டுப்பாட்டு முறைமையாகும். 

மதுசாரத்துக்கான வரியை அதிகரிக்கும்போது மதுவரி வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடிவதுடன், மதுசார பாவனையைக் குறைத்துக்கொள்ளவும் இயலும். 

கடந்த வருடத்தில் மது வரி அறிக்கைகளின் பகுப்பாய்வை மேற்கொள்ளும் போது மதுசாரத்துக்கான வரி 34 வீதம்  அதிகரிக்கப்பட்டதால் மது வரி வருமானம் அதிகரிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற வரி வருமானமும் அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டு மதுவரி வருமானம்  165.2 பில்லியன் ரூபாயாக காணப்பட்டதுடன் 2023ஆம் ஆண்டு மது வரி வருமானம் 181.10 பில்லியன்  ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட விலைச்சூத்திரத்தின்படி, மதுசாரத்துக்கு வரி அறவிடுவதன் மூலம் மதுசாரத்தின் பயன்பாட்டைக் குறைக்கவும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கவும் மதுசாரத்தினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகளைக் குறைக்கவும் முடியும். 

மதுசார பயன்பாட்டைக் குறைப்பதற்கும் மதுசார பாவனையை ஆரம்பிக்கும் வீதத்தை குறைப்பதற்கும் வரி அறவீடு மற்றும் விலை நிர்ணயம் ஆகியன சிறந்ததொரு வழிமுறையாகும்.

புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் புதிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ள இவ்வேளையில் நாட்டில் காணப்படும் மதுசார பிரச்சினைகளை குறைப்பதற்காக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பின்வரும் முன்மொழிவுகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தும் என நாம் நம்புகின்றோம்.

மதுசார பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள்

01. பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஒவ்வோர் ஆண்டும் கலால் வரி அதிகரிக்கும் விஞ்ஞான வரி சூத்திரத்தை நடைமுறைப்படுத்துதல்.

02. மதுசார நிறுவனங்களால் ஏற்கனவே அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய வரிகளை மீளப்பெறுவதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமையை தவிர்த்துக்கொள்வதற்குமான முறையான வரி அறவீட்டு முறையைத் தயாரித்தல்.

03. மதுசார பயன்பாடு மற்றும் ஊக்குவிப்பைக் குறைப்பதற்கான தற்போதைய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல், மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபையின் (NATA) உத்தேச திருத்தங்களை விரைவாக அமுல்படுத்துதல்

04. தற்காலிக மதுசார அனுமதிப்பத்திரங்களை வழங்காதிருத்தல் மற்றும் சுற்றுலாத் தொழில் என்ற போர்வையில் வழங்கப்படும் அனுபதிப்பத்திரங்களுக்கான பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துதல்

05. 2016ஆம் ஆண்டு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மதுசாரக் கட்டுப்பாடு தொடர்பான தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல்.

06. சட்டவிரோத மதுசார வகைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சட்டங்களை அமுல்படுத்துதல். 

மேலும் அந்த நோக்கத்துக்காக செயற்படும் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு நடவடிகைகளை மேற்கொள்ளல்.

07. மதுசார பாவனைக்கு ஆளாகுவதற்கு முன்னரே இளைஞர்களையும் சிறுவர்களையும் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு தொடர்த்தேர்ச்சியான தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

08. மதுசார பாவனையாளர்களை அப்பாவனையிலிருந்து விடுதலையாக்குவதற்காக ஆலோசனைகள், சிகிச்சைகள், பிற சேவைகள் மற்றும் தேவையான திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல்.

09. ஏற்கனவே காணப்படும் கொள்கைகளை வலுவிழக்கச் செய்வதற்கும் புதிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மதுசாரத் தொழில்துறையின் தலையீடுகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

மேற்படி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முறையான செயற்றிட்டத்தை புதிய அரசாங்கம் தயாரித்து இம்முறை மதுசார தடுப்பு தினத்தில் மதுசார பிரச்சினைகளை நாட்டில்  குறைத்துக்கொள்வதற்காக விரைந்து செயற்படும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) எதிர்பார்க்கிறது.

- சம்பத் த சேரம், 
நிறைவேற்றுப் பணிப்பாளர், 
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக்...

2024-12-11 17:01:27
news-image

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் ...

2024-12-11 18:37:22
news-image

எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக...

2024-12-11 17:31:13
news-image

மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் தாய்...

2024-12-11 18:23:40
news-image

மோட்டார் சைக்கிள் - ஜீப் வாகனம்...

2024-12-11 18:03:42
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி. ...

2024-12-11 18:39:14
news-image

சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான மக்கள்...

2024-12-11 17:36:54
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட...

2024-12-11 17:44:29
news-image

சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள்...

2024-12-11 17:29:18
news-image

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகள்...

2024-12-11 18:33:29
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2024-12-11 17:43:58
news-image

மஹர சிறையில் கொலை செய்யப்பட்ட கைதிகளுக்கு...

2024-12-11 17:41:01