கிரிக்கெட் வீராங்கனைகளின் ஆற்றல்களைப் பரீட்சிக்கும்  ஐ.சி.சி. மகளிர் ரி20  உலகக் கிண்ண திருவிழா இன்று ஆரம்பம்

03 Oct, 2024 | 10:51 AM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்  திருவிழா ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (3) ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு முறை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் உலக சம்பியனானதும் நடப்பு சம்பியனுமான அவுஸ்திரேலியா உட்பட 10 நாடுகள் பங்குபற்றும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி பிரசித்திபெற்ற ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்திலும் துபாய் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இப் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுகின்றபோதிலும் வரவேற்பு நாடு என்ற அந்தஸ்தை பங்களாதேஷ் கொண்டுள்ளது.

ஷார்ஜாவில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து அணிகள் விளையாடவுள்ளன.

இப் போட்டியைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் ஏ குழுவுக்கான முதலாவது போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

கடந்த ஒன்றரை வருடங்களாக மிகவும் பலம்வாய்ந்த அணிகளை வெற்றிகொண்டு மகளிர் கிரிக்கெட் அரங்கில் பல திருப்பங்களை ஏற்படுத்திய சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை, ஆசிய கிண்ண சம்பியன் என்ற அந்தஸ்துடன் மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.

'ஒவ்வொரு முறையும் நாங்கள் மிகக் குறைந்த வாய்ப்பைக் கொண்டவர்கள் (Underdogs) என்ற முத்திரையுடனேயே பங்குபற்றுகிறோம். அதனால் எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. அதிகமான அழுத்தத்தை நானும் எனது சக வீராங்கனைகளும் எங்கள் தோள்களில் சுமக்க விரும்பவில்லை. நாங்கள் மிகவும் எளிமையாக வைத்துக்கொள்ளவுள்ளோம். சில சிரேஷ்ட வீராங்கனைகளுடன் இளம் வீராங்கனைகளும் அணியில் இடம்பெறுகின்றனர். கடந்த பல மாதங்களாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளதால் எமது அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். இது மாறுபட்ட கிரிக்கெட் வடிவமாகும். அத்துடன் நிலைமைகளும் மாறுபட்டே இருக்கிறது. எனவே நாங்கள் புதிய நாட்களை மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு போட்டியையும் ஒவ்வொன்றாக திட்டமிட்டு விளையாடவுள்ளோம்' என நேற்றைய தினம் சமரி அத்தபத்து தெரிவித்தார்.

மேலும், இந்தியாவை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை முதல் தடவையாக வெற்றிகொண்ட அணி என்ற வகையில்  உலகக் கிண்ணத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் நடைபெற்ற 3 போட்டிகளில் இரண்டில் (குழு நிலை) இலங்கையும் நிரல்படுத்தல் போட்டி ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றிபெற்றன.

மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட 20 போட்டிகளில் பாகிஸ்தான் 10 - 9 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.

ஆசிய கிண்ண அரை இறுதி உட்பட கடைசியாக விளையாடப்பட்ட 3 போட்டிகளிலும் பாகிஸ்தானை இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

10 அணிகள், 150 வீராங்கனைகள், 23 போட்டிகள், ஒரு உலக சம்பியன்

பத்து  அணிகளைச் சேர்ந்த 150 வீராங்கனைகள் 23 போட்டிகளில் தங்களது அதி உச்ச ஆற்றல்களை வெளிப்படுத்த காத்திருப்பதுடன் அக்டோபர் 20ஆம் திகதி 70 கோடி ரூபா (2.34 அமெரிக்க டொலர்கள்) பணப்பரிசுடன் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை சுமக்கப்போகும் சம்பியன் அணி தீர்மானிக்கப்படும். இறுதிப் போட்டிக்கான இருப்பு நாளாக அக்டோபர் 21ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியன ஏ குழுவிலும் அங்குரார்ப்பண உலக சம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுடன் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா ஆகியன பி குழுவிலும் போட்டியிடுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் தலா 10 லீக் போட்டிகள் நடைபெறும். லீக் சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டிகளில் அக்டோபர் 17ஆம், 18ஆம் திகதிகளில் விளையாட தகுதிபெறும், அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் (அக். 20) பங்குபற்றும்.

இலங்கை பங்கபற்றும் போட்டிகள் (பி குழு)

அக்டோபர் 3 (இன்று) எதிர் பங்களாதேஷ் (ஷார்ஜா பி.ப. 3.30 மணி)

அக்டொபர் 5 எதிர் அவுஸ்திரேலியா (ஷார்ஜா பி.ப. 3.30 மணி)

அக்டோபர் 9 எதிர இந்தியா (துபாய் இரவு 7.30 மணி)

மகளிர் ரி20 உலக சம்பியன்கள்

இங்கிலாந்து (2009), அவுஸ்திரேலியா (2010, 2012, 2014, 2018, 2020, 2023), மேற்கிந்தியத் தீவுகள் (2016)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானை பிரமிக்கவைத்த பெட் கமின்ஸின் துடுப்பாட்டம்;...

2024-11-04 18:17:29
news-image

இந்தியாவை நியூஸிலாந்து முழுமையாக வெற்றிகொண்டதை அடுத்து...

2024-11-04 15:18:09
news-image

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள்...

2024-11-04 13:52:25
news-image

ஹொங் கொங் சிக்ஸஸ் கிரிக்கெட்டில் தோல்வி...

2024-11-03 17:18:59
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக...

2024-11-03 13:45:47
news-image

இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தி அசத்திய...

2024-11-03 17:15:39
news-image

ஹொங் கொங் சிக்ஸஸ்: நேபாளத்தை கால்...

2024-11-03 01:28:55
news-image

ஜடேஜா, அஷ்வின் ஆகியோரின் சுழற்சிகளில் நியூஸிலாந்து...

2024-11-03 01:23:28
news-image

ஹொங் கொங் சிக்ஸஸ் கிண்ண பிரிவுக்கான...

2024-11-01 20:09:44
news-image

இந்தியா - நியூஸிலாந்து கடைசி டெஸ்ட்:...

2024-11-01 23:12:32
news-image

இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர்...

2024-11-01 17:08:28
news-image

அறிமுக லங்கா ரி10 கிரிக்கெட் சுற்றுப்...

2024-11-01 16:08:09