இன்று சிறிதளவு மழை பெய்யும்

Published By: L. Abhilashani

03 Oct, 2024 | 08:31 AM
image

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி  கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35  கிலோ மீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து  காற்று வீசும். 

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 50 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24
news-image

பாதுகாப்பு பிரதானிகளின் பணியாட்தொகுதித் தலைமைப் பதவியை...

2026-09-09 16:28:09
news-image

கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன்...

2026-09-09 17:44:22
news-image

பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை...

2026-09-09 16:28:56
news-image

பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு 15...

2026-09-09 17:38:30
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கையிடம் வெளிப்படைத்தன்மையுடனான அர்ப்பணிப்பு...

2026-09-09 19:45:08
news-image

16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள்...

2026-09-09 16:30:03
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அரசாங்கம்...

2026-09-09 16:42:49
news-image

செம்மணி தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற...

2026-09-09 19:43:56