புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஹெக்டயருக்கு 15,000 ரூபாயாக இருந்த எங்களுடைய உர மானிய கொடுப்பனவை 25000 ரூபாவாக உடனடியாக வழங்குமாறு பணித்ததையடுத்து விவசாயிகள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்திலேயே இருந்தனர் ஆனால் இதனை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கின்றது எனவே இதனை அரசியலாகப் பார்க்காது விவசாய மக்களினுடைய நலனைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் இதனைத் திரும்ப வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும். ஏன மட்டக்களப்பு மாவட்ட விவசாய அதிகார சபையின் மாவட்ட அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு வெயூஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் புதன்கிழமை (2) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மாவட்ட விவசாய அதிகாரசபையின் மாவட்ட அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்கவுக்கு மாவட்ட அதிகார சபையின் சார்பில் முதலில் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஜனாதிபதி கடந்த சில நாட்கள் சிறந்த சில நடவடிக்கைகளை எமது நாட்டிலும் அரசியலிலும் மேற்கொண்டு வருவது எமது விவசாயிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் சந்தோஷத்தினை அளிக்கின்றது.
அதேபோன்று அவர் விவசாயிகளுக்கான உரம் மானியத்துக்கான ஹெக்டருக்கு 25000 ரூபாவிற்கு மாற்றுவதாக அறிவித்தார். இந்த செய்தியை கேட்டு எமது விவசாயிகள் கிழக்கு மாவட்டத்தில் மிகவும் சந்தோஷமடைந்ததுடன் கடந்த காலங்களிலே எமது விவசாயிகள் கைவிடப்பட்டிருந்த காணிகளையும் பசளைப் பிரச்சனை, பொருளாதார பிரச்சனை காரணமாக கைவிடப்பட்டிருந்த காணிகளையும் நெற்செய்கை செய்வதற்கு என்று சொல்லி திட்டமிட்டு இருந்தார்கள்.
எனினும் ஒரு சில தினங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தேர்தல் ஆணையாளர் இவ்வாறான சில கொடுப்பனவுகளை தற்போது மேற்கொள்ள முடியாது எனக்கூறி ஒரு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் காரணமாக விவசாயிகள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர் எனவே இவ்வாறான ஒரு செயற்பாடானது எமது மாவட்டத்திற்கும் நாட்டுக்கும் எதிர்காலத்திலே உணவு உற்பத்தியிலும் ஏனைய பொருளாதார ரீதியாகவும் பாரிய ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும்.
தற்போது விவசாயிகள் உழவு வேலைகளை ஆரம்பித்து விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். எனவே எமது உர மானியத்துக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை உடனடியாக வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்குப் பெரிய உதவியாக இருக்கும் எனத் தேர்தல் ஆணையத்திடம் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
தற்பொழுது டீசல், பெற்ரோல், மண்ணெண்ணை விலைகள் முதலாம் திகதியிலிருந்து ஜனாதிபதி குறைத்தது விவசாயிகளுக்கு பாரிய நிவாரணமாக அமைகின்றது. எனவே ஜனாதிபதி எதிர்காலத்தில்; எங்களுக்கான பசளை,களைநாசிகளுக்கான விலைகளைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப விவசாயிகளுக்குப் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்
இருந்த போதிலும் அதனை அடுத்து இந்த பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு அதனை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கின்றது. மிகுந்த சந்தோஷத்திலேயே விவசாயிகள் அனைவரும் இருந்த போதும் தற்போது பாரிய ஏமாற்றத்தோடும் பாரிய வீழ்ச்சியாகவும் நாங்கள் இதனை எதிர்பார்க்கின்றோம். இதனை அரசியலாகப் பார்க்காது விவசாய மக்களினுடைய நலனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் இதனை திரும்ப வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM