யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் “கனலி” மாணவர் சஞ்சிகையின் ஐந்தாவது இதழ் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 4ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா, சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இடம்பெறவுள்ள இச்சஞ்சிகை வெளியீட்டில் மாணவர்களுக்கான வாழ்த்துரையினை ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலனும் சஞ்சிகைக்கான கருத்துரைகளை தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஆகியோரும் வழங்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM