மனைவியைத் தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

02 Oct, 2024 | 06:05 PM
image

மனைவியைத் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த மனைவியும் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று (01) மதுபோதையில் தனது மாமனாரின் வீட்டுக்குச் சென்றுள்ள நிலையில், வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை உடைத்துச் சேதப்படுத்தி மனைவியை பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பின்னர், காயமடைந்த மனைவி இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அநுராதபுரம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னேற்றங்களுக்கு மத்தியில் நிச்சயமற்ற தன்மைகள் தொடர்கின்றன...

2024-10-05 16:36:23
news-image

கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளை ...

2024-10-05 16:35:57
news-image

உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக...

2024-10-05 16:37:54
news-image

நோயாளர் காவு வண்டி மோதி பாதசாரி...

2024-10-05 21:45:18
news-image

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரை...

2024-10-05 17:32:49
news-image

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு...

2024-10-05 17:24:31
news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30