இடைத்தரகர்களின் தலையீட்டை கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ற லாபத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் - வடக்கு ஆளுநர் 

02 Oct, 2024 | 06:07 PM
image

விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ப கொண்டு செல்வதுடன் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்கிறபோது இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ப லாபம் கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார். 

இன்றைய தினம் (2) திருநெல்வேலி விவசாய கண்காட்சியினை ஆரம்பித்துவைத்து, அதில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி”  எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி யாழ்ப்பாணம், திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறுதானியங்கள், பயிர் உற்பத்திகள் உட்பட பல்வேறு வகையான விவசாய செயல்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் விவசாய நிறுவனங்களை சார்ந்தவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20