(இராஜதுரை ஹஷான்)
காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு 2024.10.14 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் அனைத்து பணிகளையும் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது. இதற்கமைய தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்து வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களுக்கான வாக்காளர் அட்டை எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை விநியோகிக்கப்படும்.
தகுதிபெற்ற தபால்மூல வாக்காளர்கள் 2024.10.14 வாக்களிக்க முடியும். இத்தினத்தில் வாக்களிக்காதவர்கள் தாம் சேவையாற்றும் மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் 2024.10.18 ஆம் திகதி வாக்களிக்க முடியும்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும். தற்காலிக அடையாள அட்டையை வழங்குவது 2024.10.22 ஆம் திகதி வரை இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டதால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என தீர்ப்பளித்து உயர்நீதிமன்றம் வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM