லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்த தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (01) வீடு ஒன்றை உடைத்து மூன்று அரை பவுண் தங்கப் நகைகளைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலேயே, இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வீட்டு உரிமையாளர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் பிரவேசித்த பொலிஸ் குழுவினர் 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ததுடன், அவரிடம் நடத்திய விசாரணையில், அவரிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகளையும் கைபற்றியுள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி ஆறு இலட்சத்திற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (03) முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM