இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் அந்தனி நெல்சன் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (02) சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் தூயகொந்தா, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இந்ந சந்திப்பை குறிக்கும் வகையில் அவருடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டார்.
அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகர் லெப்டினன்ட் கொமாண்டர் ஜெசிகா டி மொன்ட், உதவி பாதுகாப்பு ஆலோசகர் செத் நெவின்ஸ், பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிரதானி லெப்டினன்ட் கொமாண்டர் ஷான் ஜின் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM