தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று: தந்தை செல்வா நினைவுதினம் மட்டு.வில் நாளை

29 Apr, 2017 | 09:14 AM
image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்  மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. 

மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின் போது கட்சியின் எதிர்கால செயற்றிட்டங்கள், சமகால அரசியல் சமுக பொருளதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. 

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில் அக்கிளையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் எஸ்,ஜே.வி செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு காலை 09.30மணியளவில் மட்டக்களப்பு,களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதோடு தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா,யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதுடன் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

நிகழ்வில் ஆசியுரையினை சிவஸ்ரீ சு.விநாயகமூர்த்தி குருக்ள் வழங்கவுள்ளதுடன் தலைமையுரையை பா.அரியநேத்திரனும் அறிமுகவுரையினை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தவுள்ளார்.

இதன்போது 'ஜெனீவா தீர்மானமும் ஈழத்தமிழர் அரசியலும்;; என்னும் தலைப்பில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளதுடன் 'தந்தை செல்வா' என்னும் தலைப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா உரையாற்றவுள்ளதுடன் சிறப்புரையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் நிகழ்த்தவுள்மை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47