சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடுவதற்காக கசிப்பு போத்தலுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை (01) பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக திஸ்ஸ மஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பாடசாலையின் அதிபர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது இந்த மாணவன் கசிப்பு போத்தலுடன் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.
இந்த மாணவன் 6ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறான்.
மாணவனின் உறவினர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் நண்பர்களுடன் இணைந்து சிறுவர் தினத்தைக் கொண்டாடுவதற்காக இரகசியமாக கசிப்பு போத்தலைப் பாடசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் மாணவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவனின் 19 வயதுடைய உறவினரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் திஸ்ஸ மஹாராம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM