மீதொட்டமுல்ல ஆபத்தை அறிந்தும் அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுக்­காதது ஏன் ? : எதிர்க்­கட்­சித்­த­லைவர்

Published By: Priyatharshan

29 Apr, 2017 | 09:11 AM
image

மீதொட்டமுல்லவில் ஏற்­க­னவே ஆபத்து இருக்­கின்­றது என்­பதை அதி­கா­ரிகள் அறிந்­தி­ருந்த போதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­தது  ஏன்? என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

அதி­கா­ரி­களின் செயற்­பா­டுகள் கார­ண­மாக அப்­பாவிப் பொது மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை மீதொட்ட முல்ல அனர்த்தம் தொடர்­பாக சபை­ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கேள்வி எழுப்­பினார்.

அவர்  தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கடந்த 14ஆம் திக­தி­யன்று நாட்டு மக்கள் தமிழ் சிங்­கள புத்­தாண்டைக் கொண்­டா­டிக்­கொண்­டி­ருந்த வேளையில் மீதொட்ட முல்ல பிர­தே­சத்தில் வசித்த அதி­க­மான மக்கள்  பாரிய அனர்த்­திற்கு முகங்­கொ­டுக்க நேர்ந்­தது.

பாரிய மலைகள் போன்று ஒன்று சேர்ந்­தி­ருந்த குப்பை மேடா­னது பல வீடு­களின் மீது சரிந்து விழுந்­தது. பல நாட்­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்ட மீட்பு பணிகள் மூலம் 33சடங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்ட போதிலும் கூட மேலும் பலர் குப்பை மேட்டில் சிக்கி புதைந்து போயுள்­ளனர்.

இதற்கு முன்னர் ஆட்சி செய்த அர­சாங்­கங்­க­ளுடன் இந்த அர­சாங்­கமும் இப்­பா­ரிய அனர்த்­தத்­திற்கு பொறுப்புக் கூறுதல் வேண்டும். 

குப்­பை­களை அகற்றும் பணி­யா­னது இன்று அர­சாங்­கத்தின் முக்­கிய பொறுப்­புக்­களில் ஒன்­றாக விளங்­கு­கின்­றது. உலகில் எல்லா நக­ரங்­க­ளிலும் இது தொடர்­பாக கவனம் செலுத்­தப்­பட்டு பொருத்­த­மான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

தற்­போது பாரிய சோகக் கதை­யாக மாறி­யுள்ள இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதில் இலங்­கை­யா­னது தோல்வி கண்­டுள்­ளது. விரக்தி மற்றும் சோகத்­திற்கு ஆளா­கி­யுள்ள மேற்­படி அனர்த்­தங்­களின் குடும்­பங்­களின் துயர்­களில் இணைந்து கொள்­வ­துடன் அதற்கு முகங்­கொ­டுத்­தோ­ருக்கு போதிய நட்ட ஈட்டைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அவர்­களை வேறு இடத்தில் தங்க வைப்­ப­தற்கும் துரித நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். 

இதனை நாட்டில் ஒரு முக்­கிய சம்­ப­வ­மாக கொண்டு நாட்­டிலே அதி­க­ரித்து வரு­கின்ற குப்பைப் பிரச்­சி­னைக்குத் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நான் அர­சாங்­கத்­திடம் கேட்­டுக்­கொள்ள விரும்­பு­கின்றேன்.

அத்­துடன் மேலும் சில விட­யங்­க­ளையும் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். குறிப்­பாக இந்த அதி­கா­ரி­களின்  செயற்­பாடு கார­ண­மாக அப்­பாவிப் பொது­மக்கள்  பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.  இங்கு ஆபத்து உள்­ளது என்­பது பற்றி அதி­கா­ரிகள்  ஏற்­க­னவே அறிந்­துள்­ளனர்.  எனினும் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.  ஏன் உரிய  நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்­லை­யெனக் கேட்­க­வி­ரும்­பு­கின்றோம்.

இந்த விவ­காரம் தற்­போது போட்டி நிறைந்த அர­சி­யலில்   முக்­கிய விட­ய­மா­கி­யுள்­ளது.   இலங்­கையின்  அர­சியல் கலா­சாரம் அவ்­வா­றா­ன­தாக மாறிப்­போ­யுள்­ளது. துர­திஸ்­ட­வ­ச­மாக  நாட்­டுக்கு அல்­லது நாட்­டி­லுள்ள மக்­க­ளுக்கு அவ­சி­ய­மான விட­ய­மொன்று   எந்­த­வொரு அர­சியல்    தலை­யீடும் இன்றி முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை.  

 பல்­வேறு  அர­சியல் கட்­சி­களால்  கையா­ளப்­படும் வேறு­பட்ட  தந்­தி­ரோ­பா­யங்கள்  அதி­கா­ரங்­களை மீளப்­பெ­று­வ­தற்கும்  சட்­ட­ரீ­தி­யாக அமைக்­கப்­பட்ட அர­சாங்­கத்தைக் குழப்­பு­வ­தற்கும்   முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

தமது சௌக­ரி­யத்­துக்­காக   மற்றும்   அதி­கா­ரத்தை மீளப்­பெ­று­வ­தற்­கு­காவும்  இ நாட்­டுக்கு நன்­மை­ய­ளிப்­பதா  அல்­லது தீமை­ய­ளிப்­பதா என்­ப­தனை பற்­றியும் கவ­னத்தில் கொள்­ளாது  இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வது அர­சியல் கலா­சா­ர­மாக மாறி­யுள்­ளது. 

அவ்­வா­றா­ன­வர்கள் ஜன­நா­யக ரீதியில் மக்கள்  வழங்­கிய  ஆணையை ஏற்­றுக்­கொள்­ளாத வகையில் செயற்­ப­டு­கின்­றனர். இந்த அர­சியல் கலா­சாரம் மாற்­றப்­பட வேண்டும்.

சொந்த அர­சியல் இலா­பத்­துக்­காக மக்கள் வழங்கிய ஆணையை  மீறும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக்கூடாது. மீதொட்டமுல்லை  பனிக்கட்டி மலையின் ஒரு முனையாகும்.  

எமது நாடு  இதனைவிட பாரிய அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கலாம். அரசியல்  கலாசாரத்தில் மாற்றம் ஏற்படாவிட்டால் இதுபோன்ற பல  அனர்த்தங்கள்  ஏற்படுவதற்கான  அச்சம்  காணப்படுகிறது. தேசப்பறறு எனக்  கூறிக்கொள்வது நாட்டின் நன்மைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைகளுக்கான மாற்றாக அமையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19