திருகோணமலை ஆறாம் கட்டையில் காணிகளிற்கான பாதைகளை தடை செய்துள்ள தனிநபர் - பொதுமக்கள் சீற்றம்

Published By: Digital Desk 7

02 Oct, 2024 | 01:06 PM
image

திருகோணமலை  நிலாவளி வீதியில் ஆறாம் கட்ட பிரதேசத்தில் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளின் பாதைகள் தனியார் ஒருவரால்  தடைப்படுத்தப்பட்டு  அது தொடர்பான  முப்பது குடும்பங்களின் மேல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை  (01)  ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினர்.   

குறித்த நடவடிக்கைகள் முன்னால் கிழக்கு ஆளுனரின் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்டதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் உறுதி காணிகள் தான் வசித்து வந்த நிலையில் பிரான்சிலிருந்து வருகை தந்த ஒரு நபர் தன்னுடைய காணி என்று  கூறிய நிலையில் இவ்வாறான செயற்பாடு ஒன்று இடம்பெற்று தற்போது வழக்கு நடந்து கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஒரு கிறிஸ்தவ மதஸ்தலம் ஒன்று பாதை மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளது அதற்கு வழி வரும் மக்கள் அநேகர் பிரச்சினை எதிர்கொள்வதாக குறித்து கிறிஸ்தவ மத பாதிரியார் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இங்கு கிறிஸ்தவ தேவாலயம்,பாலர் பாடசாலை செல்லும் பாதைகள் தடைப்படுவதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பகுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

1982ம் ஆண்டில் காணியை கொள்வனவு செய்து சட்ட ரீதியான குடியேற்றங்களை அமைத்து வந்தோம் தற்போது ஒருவர் தன்னுடைய காணி என அப்பட்டமாக உரிமை கோருகிறார் இதன் மூலம் பாரிய மன உளைச்சல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம் என அப் பிரதேச மக்களை கவலை வெளியிடுகின்றனர். 

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனவும் ஒரு சில காடையர்களை கொண்டு தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விட்டனர்  எனவே எங்களது பூர்வீக குடியிருப்பு காணிகளை பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னேற்றங்களுக்கு மத்தியில் நிச்சயமற்ற தன்மைகள் தொடர்கின்றன...

2024-10-05 16:36:23
news-image

கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளை ...

2024-10-05 16:35:57
news-image

உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக...

2024-10-05 16:37:54
news-image

நோயாளர் காவு வண்டி மோதி பாதசாரி...

2024-10-05 21:45:18
news-image

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரை...

2024-10-05 17:32:49
news-image

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு...

2024-10-05 17:24:31
news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30