முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும் செய்திகள் வந்தன; பின்னர் ஏவுகணைகள் இடைமறிக்கப்படும் சத்தம் கேட்டது - இஸ்ரேல் நிலைமை பற்றி பி.பி.சி.

Published By: Rajeeban

02 Oct, 2024 | 01:56 PM
image

இஸ்ரேலிய நேரப்படி 7.30 மணியளவில் அனைவரின் கையடக்க தொலைபேசிகளிற்கும் அந்த குறுஞ்செய்தி வந்தது.

'பாதுகாப்பான இடம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நீங்கள் அனைவரும் உடனடியாக செல்லவேண்டும் மறுஅறிவிப்பு வரும்வரை அங்கேயே இருக்கவேண்டும்" என அந்த குறுஞ்செய்தி எச்சரித்தது.

இஸ்ரேலிய இராணுவத்தின் உள்நாட்டு பாதுகாப்பு படையணியின் மத்திய கட்டளை பீடமே இந்த செய்தியை அனுப்பியிருந்தது. உயிர் காக்கும் அறிவுறுத்தல்கள் என அது குறிப்பிட்டிருந்தது.

ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்படுவது ஆரம்பித்ததும் மக்கள் பாதுகாப்பான அறைகளில் உள்ள புகலிடங்களை நோக்கி சென்றனர்.

அபாயஎச்சரிக்கை ஒலிப்பதை மில்லியன் கணக்கான மக்கள் செவிமடுத்தனர்.

அபாயஎச்சரிக்கை ஒலிக்க தொடங்கியதும்,பிபிசியின் ஜெரூசலேமின் பணியகத்தில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு நாங்கள் சென்றோம்.ஜன்னல்கள் இல்லாத பாதுகாப்பான இடம்.

ஏவுகணைகள் தலைக்கு மேலே செல்வதனால் உண்டாகும் பாரிய சத்தத்தினையும் இஸ்ரேல் அவற்றை செயல் இழக்கச்செய்வதால் ஏற்படும் சத்தத்தையும் நாங்கள் அடிக்கடி கேட்டோம்.

இங்கும் வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் ஏவுகணைகள் காரணமாக ஏற்பட்ட வெளிச்சங்களை காண்பித்துள்ளன. அவை இடைமறிக்கப்பட்டதால் அல்லது வெடித்து விழுவதால் ஏற்பட்ட புகை மண்டலங்களையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

இஸ்ரேலிய இராணுவத்தினர் 8 மணியளவில் தாங்கள் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதாக தெரிவிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டதுடன் பொதுமக்களை தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

'நீங்கள் கேட்கும் சத்தங்கள் இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளால் ஏற்பட்டவை" என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.

ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ள தயாராகின்றது என்ற தகவல் வெளியானது முதல் இஸ்ரேலில் கரிசனைகள் காணப்பட்டன.

இஸ்ரேலிய துருப்பினர் லெபனானிற்குள் ஊடுருவிய சில மணிநேரங்களின் பின்னர் இந்த தகவல் வெளியாகியிருந்தது.லெபனானி;ல் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட இலக்குவைக்கப்பட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

ஹெஸ்புல்லா ஹமாஸ் தலைவர்களையும் ஈரானின் இராணுவ அதிகாரியையும் கொலை செய்த இஸ்ரேலின் தாக்குதல்களிற்கு பதிலடியாகவே ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

தலைக்கு மேலாக ஏவுகணைகள் பறந்துகொண்டிருக்க இஸ்ரேலின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ள மக்கள் குறுஞ்செய்திகள் மூலம் தங்கள் நிலைமைகளை பகிர்ந்துகொண்டனர்.

எல்லா நேரமும் நிறைய எச்சரிக்கை ஒலிகள் ஒலித்துக்கொண்டிருந்தன, இதனால் நாங்கள் பாதுகாப்பான அறைகளில் இருக்கின்றோம்,தற்போதைக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என 2 பிள்ளைகளின் தாயார் குரல் செய்தி மூலம் எங்களிற்கு தகவல் தெரிவித்தார்.

'நாங்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளோம்,எங்கள் வாழ்க்கையில் இது இடம்பெறும் என நாங்கள் நினைத்துப்பார்க்கவில்லை,ஆபத்து மிகவும் நெருங்கிவந்துவிட்டது "என டெல் அவியை சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்தார்.

வழமையாக நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருப்போம் பாதுகாப்பான புகலிடத்தை நோக்கி செல்வதில்லை ஆனால் இந்த முறை நாங்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லவேண்டும் என்பதை உணர்ந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்

'அதுபாரிய சத்தம்"என தெரிவிக்கின்றார் சட்டத்தரணி எவ்ராட் எல்டான் செச்டெர் மத்திய இஸ்ரேலில் உள்ள ரணாணாவிலிருந்து வட்ஸ்அப் மூலம் தெரிவிக்கின்றார்.'இன்றிரவுடன் இது முடியப்போவதில்லை" என்கின்றார் அவர்.

'இது எவ்வாறு மாற்றமடையப்போகின்றது என்பதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்,உண்மையிலேயே இது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது,ஆனால் இஸ்ரேலிய இராணுவம் எங்களை பாதுகாக்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,ஈரான் மிகப்பெரிய தவறிழைத்துள்ளது "என்கின்றார் அவர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி...

2024-10-05 12:29:13
news-image

தனியார் கடன் அதிகரிப்பினால் வளர்ச்சியடையும் பொருளாதாரம்

2024-10-04 16:15:59
news-image

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி...

2024-10-03 20:30:56
news-image

இ.தொ.காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...! 

2024-10-03 17:26:10
news-image

முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும்...

2024-10-02 13:56:37
news-image

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய...

2024-10-02 10:45:36
news-image

மாறி வரும் உலகில் உணரப்படாத வயோதிபம்

2024-10-01 15:53:03
news-image

பரீட்சை வினாக்களின் கசிவு: பொறுப்புக்கூறுவது யார்?

2024-10-01 14:52:31
news-image

இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய...

2024-10-01 11:04:59
news-image

அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை...

2024-10-01 10:47:45
news-image

முதியோரின் உணர்வுகளை மதிப்போம் : இன்று...

2024-09-30 11:48:26
news-image

சிறுவர்களின் உலகைக் காப்போம்! : இன்று...

2024-09-30 12:17:38