இந்தியாவின் தேச பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று (02) காந்தி ஜெயந்தி அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரியவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இங்குள்ள இந்த மார்பளவுச் சிலையானது மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின நினைவினை முன்னிட்டு 2019ஆம் ஆண்டில் இந்தியாவால் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தி தியான நிலையில் இருக்கும் இந்த 42 அங்குல வெண்கல சிலை பத்மபூசண் விருதுபெற்ற ராம் வஞ்ஜி சுதரால் வடிவமைக்கப்பட்டதாகும்.
குஜராத்தின் கேவாடியாவில் உள்ள உலகின் மிகவும் உயரமான வெண்கலச் சிலையான சர்தார் பட்டேல் சிலையும் சுதரால் வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM