ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 30ஆம் திகதி இரவு ஹங்வெல்ல பிரதேசத்துக்குச் சென்ற இனந்தெரியாத நபரொருவர் 55 வயதுடைய வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில், காயமடைந்த வர்த்தகர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லலித் கன்னங்கரா“ என்பவரின் தலைமையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு, உயிரிழந்த வர்த்தகரின் வீட்டின் மீது கடந்த 2021ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லலித் கன்னங்கரா“ என்பவர் உயிரிழந்த வர்த்தகரிடம் கப்பம் கோரியுள்ள நிலையில் வர்த்தகர் அதனை தர மறுத்ததால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது அந்த பிரதேசத்தில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM