பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடல்   

02 Oct, 2024 | 11:34 AM
image

எங்களுடைய கட்சியினர் தனித்து வாக்கு கேட்பதற்கும் அதேவேளை குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தியோடு நாடு முழுவதிலும் நாங்கள் சேர்ந்து வாக்கு கேட்கும் பொதுவான தீர்மானத்துக்கும் பாதகமில்லாமல் நாங்கள் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கிறோம் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பான கலந்துரையாடல் புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில்  நேற்று (01) இரவு நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கையிலேயே ரவுப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

புத்தள மாவட்டம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த ஒரு கலந்துரையாடலை நாங்கள் நடாத்தி இருக்கிறோம். 

இதில் இன்று மூன்று விவகாரங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. 

குறிப்பாக இன்று பரவலாக புத்தளத்தில் நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் இல்லாததன் காரணமாக கடந்த முறை எல்லா அமைப்புகளும் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து போட்டியிட்ட காரணத்தினால் ஒரு உறுப்பினரை பெறுகின்ற வாய்ப்பு இருந்ததை அடிப்படையாக வைத்து அதே முறையில் மீண்டும் ஒரு முயற்சி செய்யப்படவேண்டும் என்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் இது குறித்த அமைப்பினரோடு சந்திப்பதற்கு நாங்கள் வரவேண்டும் என்பதற்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

அது குறித்து சாதகமாக பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கிறோம். எனவே, இந்த சந்திப்பை நடாத்துவதற்கு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். அதேவேளை, எங்களுடைய கட்சியினர் தனித்து வாக்கு கேட்பதற்கும் அதேநேரம், குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியோடு நாடு முழுவதிலும் நாங்கள் சேர்ந்து கேட்பதான பொதுவான தீர்மானத்துக்கும் பாதகமில்லாமல் நாங்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கிறோம். சில நாட்களில் உறுதியான தீர்மானஙகளை நாங்கள் எடுப்போம் என்றார். 

இந்த கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கு மாகான ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19
news-image

மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-10-13 18:59:29
news-image

கடும் மழை காரணமாக கட்டான பிரதேச...

2024-10-13 19:00:52
news-image

நாங்கள் வாக்கு கேட்பது மற்றவர்களை போல...

2024-10-13 19:02:11
news-image

மது போதையில் மட்டு. பாசிக்குடா கடலில்...

2024-10-13 17:39:22
news-image

தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய...

2024-10-13 19:06:04