விலையுயர்ந்த பொருட்களுடன் இருவர் கைது

02 Oct, 2024 | 11:24 AM
image

புதையல் தோண்டியதால்  கிடைத்ததாகக் கூறப்படும் விலையுயர்ந்த மாணிக்கக் கற்கள் மற்றும் சிலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பரமங்கட பசறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 63 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டியதால் கிடைத்ததாகக் கூறப்படும் விலையுயர்ந்த 11 மாணிக்கக் கற்கள் , செப்பு மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட 4  சிலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19
news-image

மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-10-13 18:59:29
news-image

கடும் மழை காரணமாக கட்டான பிரதேச...

2024-10-13 19:00:52
news-image

நாங்கள் வாக்கு கேட்பது மற்றவர்களை போல...

2024-10-13 19:02:11
news-image

மது போதையில் மட்டு. பாசிக்குடா கடலில்...

2024-10-13 17:39:22
news-image

தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய...

2024-10-13 19:06:04