மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆராய்ந்தார்.
உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை பணியக தவிசாளர், ஆளுநரின் ஒருங்குஇணைப்பு செயலாளர், பணிப்பாளர் சுற்றுலாப் பணியகம், சுற்றுலாத்துறை பணியாக அதிகாரி, நெடுந்தீவு பிரதேசசபை செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் யாழ்ப்பாணம், போன்ற திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
வடக்கு மாகாண சுற்றுலாதுறை தொடர்பான தற்போதைய நிலையினை கேட்டு அறிந்து கொண்ட ஆளுநர் நெடுந்தீவில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு மேற்கொண்டப்படும் பணிகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டார். வடக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலமாக வடக்கு மாகாண மக்கள் அதிகளவு வருமானத்தை ஈட்டுவதற்கு சாதாகமான நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
சுற்றுலாத்துறையை பிரதேசங்களின் தன்மையை ஆராய்ந்து அபிவிருத்தி மேற்கொள்ளுமாறும், சுற்றுலாத்துறையின் விரிவாக்கம் மேற்கொள்ளும் பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் மரநடுகை தொடர்பாகவும் முக்கியமான விடயங்களை தெரிவித்தார்.
மேலும்,விரைவாகவும் வேகமாகவும் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் எனவும் பணிப்புரை விடுத்தார். உலக சுற்றுலா தினத்தை எமது பிரதேசங்களில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM