கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் ஆண்கள் இருவர் கொலை

By Robert

29 Apr, 2017 | 10:21 AM
image

(க.கமலநாதன்)

தலவத்துகொட, மாதிவெல வீதியில் வீடொன்றுக்கு முன்னால் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.  

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அத்துருகிரிய - ஒருவல வீதி, மஹஜன மாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதேவேளை மீகஹவத்தை, அகுருமுல்ல, தெல்கொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி தனது கணவரை கொலை செய்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரிடையேயும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமானதே இக்கொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த கணவருக்கு 28 வயது என்று தெரிவிக்கப்படுகிறது.  சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு...

2022-09-28 15:26:39
news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31
news-image

கொழும்பு - கஜீமா தோட்ட தீ...

2022-09-28 16:51:14