அரசாங்கம் வழங்கியவற்றில் 7 வாகனங்களை மீளக் கையளித்துள்ளேன்; ஓய்வூத்தியத்திலும் சமூக சேவைகளையே ஆற்றியுள்ளேன் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

Published By: Vishnu

02 Oct, 2024 | 03:50 AM
image

(எம்.மனோசித்ரா)

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் எனக்கு ஓயவூதியம் முறையாக வழங்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்ட 94 000 ஓய்வூதியத்தையும் சமூக சேவைகளுக்காவே பயன்படுத்தினேன். அரசாங்கம் வழங்கியவற்றில் 7 வாகனங்களை மீளக் கையளித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை 2015க்குப் பிறகு நான் அதை கேட்கவுமில்லை, மற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி எனக்கு ஓய்வூதியம் வழங்கவில்லையென அரசு தெரிந்திருக்கவுமில்லை.

அதன் பின்னல் 94000 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. அது தான் எனக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியமாகும். அதன்பிறகு நான் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றும் வழங்கினேன். எனது சொந்த உபயோகத்திற்காக தனி கணக்கை திறந்து, பல சமூக சேவைகளுக்காக நான் அதைப் பயன்படுத்தினேன்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 14 வாகனங்களில் 7 வாகனங்களை மீள ஒப்படைத்துள்ளேன். தற்போது என்னிடம் 4 வாகனங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு பாதுகாப்புக்காகவும், ஏனைய இரண்டும் பயணம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குமாகும். 12 வருட அரசியல் வாழ்க்கையில் தனது செந்த செலவுக்காக அரசிடமிருந்து எந்த பணத்தையும் நான் பெறவில்லை.

ஆட்சி காலத்தில் சிலரது தொடர்ச்சியான கோரிக்கைகளால் 12 ஆண்டுகளில் 4 வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கினேன். ஆனால் நான் அதனைப் பெறவில்லை. எனது ஊழியர்களுக்கும் நானே ஊதியங்களை வழங்குகின்றேன். மின்சாரம் மற்றும் நீர்கட்டணங்களைக் கூட நானே செலுத்துகின்றேன். ஹெக்டர் கொப்பேடுவ உடன் நான் மாத்திரமே வாகனத்துக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.

முந்தைய ஆட்சியாளர்களுக்கு உணவுக்கான செலவுகள் கூட அரசாங்கத்தினாலேயே வழங்கப்பட்டன. அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தைகளில் மாத்திரமே நாம் அரச செலவில் உணவுகளைப் பெற்றிருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா: வெளியானது...

2024-10-08 23:45:49
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையில்...

2024-10-08 17:09:54
news-image

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி...

2024-10-08 17:11:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய...

2024-10-08 17:09:23
news-image

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முருகன்...

2024-10-08 21:08:36
news-image

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப முடிவு திகதி...

2024-10-08 21:01:37
news-image

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...

2024-10-08 19:34:32
news-image

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப்...

2024-10-08 18:55:58
news-image

பாராளுமன்றத் தேர்தல் ; வேட்பாளர்களைத் தெரிவு...

2024-10-08 17:28:25
news-image

சீன இராணுவ பாய்மரக் கப்பலுடன் கூட்டு...

2024-10-08 17:15:40
news-image

தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கும் யாழ். மாவட்ட...

2024-10-08 17:25:54
news-image

ஓடையில் தவறி வீழ்ந்து நான்கு வயது...

2024-10-08 17:56:10