எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர். அவ்வாறான செயற்பாடொன்றே இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தின் போதும் நடந்தது என தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (1) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
செவ்வாய்க்கிழமை (1) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் இடையூறு ஏற்படுத்தியதோடு தாம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் என பொய்யாக கூறி எமது கட்சிக்கு உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தவும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கோடும் செயற்பட்டிருந்தனர்.
தற்போது தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படுகின்ற ஆதரவையும் நல்ல எண்ணத்தினையும் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இவ்வாறு கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதை எண்ணி மனவருத்தமடைகின்றோம்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடு இடம்பெறாத வகையில் எமது அரசாங்கம் அதனைப் பார்த்துக் கொள்ளும்.
தேர்தல் நெருங்கி வரும் காலங்களில் இவ்வாறான சேறு பூசும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நாங்கள் தமிழ் மக்களிடமும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடமும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM