அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் குறித்த அறிக்கை தயாராகிறது - அமைச்சரவை பேச்சாளர்

01 Oct, 2024 | 05:39 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயங்கள், தூதரகங்களில் எமது நாட்டின் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பான முழுமையான அறிக்கைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக தயாரிக்கப்படுகின்றன. குறித்த அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏனைய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஒரே சந்தர்ப்பத்தில் மீள அழைக்கப்பட மாட்டார்கள். தற்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் இடம்பெறுகிறது. ஐ.நா.வுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் பீரிஸ் அங்கு உரையாற்றவுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களை மீள அழைப்பது பொறுத்தமானதாக இருக்காது.

எவ்வாறிருப்பினும் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால் அவற்றை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று தான் மத்திய வங்கி ஆளுனர் மற்றும் திறைசேறி செயலாளரும் பதவியில் நீடிக்கின்றனர். நாணய நிதியத்துடனான நேரடி பேச்சுவார்த்தைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அந்த பதவிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பவில்லை.

மேலும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் எமது அரசாங்கத்தில் 25 அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவர். இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். மாறாக பிரதி அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள். கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று இவற்றை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28